×

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே மரணம் அடைந்தார். ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708- விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷேன் வார்னே, 2007- ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.  ஷேன் வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மரணத்திற்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52. இவரது மரணம் கிரிக்கெட் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின்  திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ‘அவர் சீக்கிரம் மரணம் அடைந்து விட்டார்’ என சொல்வதற்கு கடினமாக உள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கிரிக்கெட் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். …

The post ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Shane Warne ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Thailand ,M.K.Stal ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...